இசைவிழா, ஆய்வரங்கம்
பயிலரங்கம், விருதுகள் வழங்கல், நூல்கள் வெளியீடு,
இசைக்கருவிகள் வழங்கல்
இசைவிழா, ஆய்வரங்கம்
பயிலரங்கம், விருதுகள் வழங்கல், நூல்கள் வெளியீடு,
இசைக்கருவிகள் வழங்கல்
பேரன்புடையீர் வணக்கம்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து நடத்தும் பன்னாட்டு இசைத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்வரும் 2026 ஆகஸ்ட் திங்கள் 4முதல் 6 வரையுள்ள மூன்று நாட்கள் நிகழ உள்ளது.
மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பிக்க அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும், மாணவர்களையும், இசை ஆர்வலர்களையும் அன்போடு அழைக்கின்றோம்.
இப்படிக்கு
முனைவர் தி.அருட்செல்வி
ப.புருடோத்தமன்
தொடர்பு எண்கள்
பேராசிரியர் முனைவர் தி.அருட்செல்வி : +91 98940 20154
திரு ப.புருடோத்தமன் : +65 9666 1606
முனைவர் நா.கிரீஷ்குமார் : +91-98941 95962
முனைவர் கி.சிவகௌரி : +91-99941 88964
திரு இரா.கோமகன் (நன்கொடையாளர்கள்) : +91-9443-949692 +91-9363-630692
கட்டுரைப் பொருண்மைகள்
தமிழிலக்கியங்களில் இசை - தொல்லியல் ஆவணங்களில் (கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கட்டடக்கலை) இசை - இசைத்தமிழ் நூல்கள் (பஞ்ச மரபு, கருணாமிருதசாகரம் போன்றவை) - தமிழிசைக் கலைஞர்கள், இயல் இசைக் கலைஞர்கள் - பண்கள், தாளங்கள் - நாட்டுப்புறப் பாடலில் தமிழிசை - நாட்டிய சாத்திரத்தில் இசை - இசைநாடகங்களில் இசை - பரதநாட்டியத்தில் தமிழிசை - தமிழிசை வரலாறு - தமிழிசை வாக்கேயக்காரர்கள் - தமிழிசை வளர்த்த மன்னர்கள், புரவலர்கள் - தமிழிசை இயக்கம் - தமிழர்களின் இசைக்கருவிகள் - பிற இசைகளில் தமிழிசையின் தாக்கம் - பிற நாடுகளில் தமிழிசை - திரைத்துறையில் தமிழிசையின் தாக்கம் - தமிழிசையின் எதிர்காலம்- தமிழிசையும் பாமரர்களும் - நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் தமிழிசை - தமிழிசை கற்றல் கற்பித்தல் முறைகள்- இசை பீடங்கள், இசை மையங்களில் தமிழிசை - தமிழிசைப் பாடல்கள் (கீதம், சுரசதி, பிரபந்தம், வண்ணம், கீர்த்தனைகள், பதம், தேவாரம், திவ்வியப்பிரபந்தம், தில்லானா) - இசை விழாக்களில் தமிழிசை - பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில், பிற ஆராய்ச்சி நிறுவனங்களில் தமிழிசை
மேற்கண்ட பொருண்மைகள் மட்டுமின்றித் தமிழிசையை ஒட்டிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.
*** கட்டுரைகளைத் தெரிவுசெய்வதில் மாநாட்டுக் கூராய்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
குறிப்புகள்
இசைத்துறையில் ஆழ்ந்த புலமை பெற்றோர் அனைவரும் ஆய்வுக் கட்டுரை வழங்கலாம்.
கட்டுரைகள் யூனிக்கோடு எழுத்துருவில் ஏ4 தாளில் இரண்டு வரி இடைவெளி விட்டு மிகச் சரியாக ஐந்து பக்கங்களில் அமைய வேண்டும். மிகுதியான பக்கங்களில் அமையும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
கட்டுரைகள் அடிக்குறிப்பு துணைநூற் பட்டியலுடன் ஆய்வு நெறிமுறையுடன் (5 பக்கங்களுக்குள்) அமைதல் வேண்டும்.
Microsoft Word ஆவணமாக யூனிக்கோடு எழுத்துருவில் தட்டச்சு செய்திருத்தல் வேண்டும்.
தமிழில் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரைகள் அமையலாம்.
கட்டுரைகளை isaithamizh.conference@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவை ஐஎஸ்பிஎன்/ஐஎஸ்எஸ்என் குறியீட்டுடன் மாநாட்டுத் தொடக்கவிழாவில் வெளியிடப்படும்.
ஆய்வாளர்கள் நெறியாளர் பெயரையும் இணைத்துக் கட்டுரை வழங்கலாம். நெறியாளருக்கான ஆய்வு கோவை வேண்டுமெனில் அதற்காகக் கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்திப் பதிவு செய்த பேராளர்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஆய்வுக்கோவை மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
பேராளர்கள் தங்களுக்கு வேண்டடிய தங்கும் வசதியை தாங்களே ஏற்பாடுசெய்துகொள்ள வேண்டும். பல்கலைக்கழக விருந்தினர் மாளிகயில் சொந்த கட்டண்த்தில் தங்கும் வசதி வேண்டுவோர் எழுத்து மூலம் கோரினால் பரிந்துரை செய்யப்ப்டும்.
ஏற்றுக்கொள்ளப்ப்ட்ட கட்டுரை எழுதிய கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இசைத்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தமிழிசையை உலகெங்கும் பரவச்செய்ய வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தோடு செட்டி நாட்டு அரசர் இராஜா சர் மு.அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் 1929 ஆம் ஆண்டு இசைத் துறையினை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசை மற்றும் தமிழ்த்துறைகளை முதல் துறையாகத் தொடங்கச் செய்தார்.
மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த இசைத்துறையின் முதல் தலைவராகச் சங்கீத கலாநிதி டி.எஸ்.சபேசய்யர் அவர்கள் பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து சங்கீத கலாநிதி டைகர் கே.வரதாச்சாரியார், சங்கீத கலாநிதி க.பொன்னையா பிள்ளை, திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை, சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, எம்.எம்.தண்டபாணி தேசிகர், மகாவித்துவான் வா.சு.கோமதி சங்கர ஐயர், டாக்டர் மதுரை எஸ்.சோமசுந்தரம், இசைப் பேரறிஞர் டாக்டர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் போன்ற மேதைகள் இசைத்துறையில் தலைமைப் பொறுப்பில் சீரிய பணியினைச் செய்துள்ளார்கள்.
இசையில் குரலிசை, வீணை, குழல், வயலின், மிருதங்கம், நாட்டியம், நாகஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய பல துறைகளில் சான்றிதழ், இள நுண்கலை, முது நுண்கலை (முனைவர் பட்ட ஆராய்ச்சி வரை) அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையால் கற்பிக்கப்படுகிறது. இள நுண்கலை, முது நுண்கலை பட்டப்படிப்பு வகுப்புகள் தொலைதூரக் கல்வி மூலமும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட இசைத்தமிழ் தொகுதி வெளியீடுகள் இருபத்தொன்றும் இன்றளவில் தமிழிசையின் களஞ்சியமாக விளங்குகின்றன.
தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகம்
சிங்கப்பூரில் இயங்கிவரும் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகம் மற்றும் தமிழிசைப்பள்ளி ஆகியவற்றின் நிறுவனரான திரு ப.புருடோத்தமன் அவர்களின் தமிழிசை ஆர்வத்தின் அடுத்த முயற்சியாக 2023-இல் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது.
இக்கழகத்தின் முதன்மையான நோக்கங்களாவன:
இசைவிழாக்கள் நடத்துதல் வழி அரங்கிசையில் தமிழை முதன்மைப் படுத்தல்.
இசைக்கல்வியில் தமிழுக்கு முதலிடம்
இசை ஆர்வத்தையும் அறிவையும் பொதுமக்களிடையே விரிவுபடுத்தல்.
தமிழிசை ஆராய்ச்சிக்குப் புத்துணர்வு அளித்தல்.
தமிழிசை நூல்களைப் பதிப்பித்தல், வெளியிடல்.
தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகத்தின் அண்மைய நிகழ்வுகள்
2024 அடையாறு இசைக்கல்லூரி, சென்னை
நூல்கள் வெளியீடு, இசைக்கருவிகள் வழங்கல் விழா
2025 அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
இசைத்தமிழ் மாநாடு, இசைவிழா, ஆய்வரங்கம், பயிலரங்கம், இசைக்கருவிகள் வழங்கல்.
மாநாட்டுப் புரவலர்கள்
புரவலர்
திரு இரா.கோமகன்,
இயக்குநர், தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகம்
தலைவர், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்
ஏற்பாட்டுக்குழுத் தலைவர்
முனைவர் தி.அருட்செல்வி,
பேராசிரியர், புலமுதன்மையர், நுண்கலைப்புலம்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஏற்பாட்டுக்குழுத் இணைத் தலைவர்
திரு ப.புருடோத்தமன்,
இயக்குநர், தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகம்,
தலைவர், தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகம், சிங்கப்பூர்.
மாநாட்டுக் குழு உறுப்பினர்கள்
•முனைவர் வ.ல.வே.சுதர்சன், உதவிப்பேராசிரியர் & தலைவர், இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
•முனைவர் இரா.கா.குமார், இணைப்பேராசிரியர், இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
•முனைவர் நா.கிரீஷ்குமார், உதவிப்பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் - இசை பிரிவு, தொலைதூரக் கல்வி இயக்ககம், இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
•திரு கோ.பாபு, உதவிப்பேராசிரியர், இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
•முனைவர் அ.விஜய் கார்த்திகேயன், உதவிப்பேராசிரியர், இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
•முனைவர் அ.சரவணன், உதவிப்பேராசிரியர், இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
•முனைவர் தி.பாலச்சந்தர், உதவிப்பேராசிரியர், இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
•முனைவர் ச.முரளி, உதவிப்பேராசிரியர், இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (Deputed).
•திரு ஜி.செங்கல்வராயன், உதவிப்பேராசிரியர் (ஓய்வு)
•முனைவர் மு.இளங்கோவன், பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி
•முனைவர் இராச.கலைவாணி, இயக்குநர், ஏழிசை இசை ஆய்வகம், மயிலாடுதுறை
•முனைவர் இரா.மாதவி, இணைப்பேராசிரியர், தலைவர், இசைத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
•முனைவர் செ.கற்பகம், இணைப்பேராசிரியர், இசைத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
•முனைவர் ஆ.பத்மாவதி, தொல்லியல் ஆய்வர்
•பேராசிரியர் பூ.ராசமன்னன், தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகம்
•முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார், தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகம்
•முனைவர் கூ.மு.புவனேஸ்வரி, ஆராய்ச்சி அலுவலர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
•முனைவர் கிருபாசக்தி கருணா, முதுநிலை விரிவுரையாளர், இசைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
•திரு வே.பார்த்திபன், நிறுவனர், ஆற்றுப்படை, திருச்சிராப்பள்ளி
•முனைவர் பிரியதர்ஷினி ஜெதீஸ்வரன், சிரேஷ்ட விரிவுரையாளர், சு.வி.அ.க.நி., கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
•திரு பி.டி.சேஷாத்ரி, இசை ஆசிரியர், ஸ்ரீ அகோபிலமடம் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, சென்னை
•ஆசான் மன்னர் மன்னன் மருதை, விரிவுரையாளர் (ஓய்வு), மலயா பல்கலைக்கழகம், மலேசியா.
•திரு சு.முத்து மாணிக்கம், தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
•திரு சு.சங்கர் ராம், துணைத்தலைவர், தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகம், சிங்கப்பூர்.
•திரு ப.கருணாநிதி, தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகம், சிங்கப்பூர்.
•திரு க.சந்திரசேகரன், தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகம்.